2023-24ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், சுதந்திரப் போராட்ட வீராங்கனை குயிலி அவர்களுக்கு சிவகங்கையில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க, சிவகங்கை வட்டம், இராகினிப்பட்டியில் அமைந்துள்ள வேலுநாச்சியார் மணிமண்டப வளாகத்தில் குயிலித்தாய்க்கு 50 இலட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள திருவுருவச்சிலையை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர்
மு. க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து , சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை குயிலித்தாய் அவர்களுக்கு 50 இலட்சம் ரூபாய் மதிப்பில் நிறுவப்பட்டுள்ள திருவுருவச் சிலையை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷாஅஜித் சட்டமன்ற, உள்ளாட்சிப் பிரதிநிதிகள்பங்கேற்றனர்.