மது எடுப்பு விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம்.

59பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் அருகே அரண்மனை சிறுவயலில் புலிக்குத்தி அம்மன் மது எடுப்பு விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. திண்டுக்கல், , காரைக்குடி நெடுஞ்சாலையில் பெரிய மாடு, சின்னமாடு என இரண்டு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெரிய மாட்டு பிரிவில் 19 ஜோடிகளும், 2 சுற்றுகளாக நடைபெற்ற சிறிய மாட்டு பிரிவில் 54 ஜோடிகள் என 73 கலந்து கொண்டன. பெரிய மாட்டுக்கு 8 கிலோமீட்டர் தொலைவும், சிறிய மாட்டுக்கு 6 கிலோமீட்டர் தொலைவும் பந்தய எல்லைகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. சீறி பாய்ந்து சென்ற மாட்டுவண்டி போட்டிகளை சாலையின் இருபுறங்களில் நின்று ஏராளமான பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தி கண்டுகளித்தனர். போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களில் வந்து மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கத் தொகையும், பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது, மேலும் கலந்து கொண்ட அனைத்து மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும் சிறப்பு பரிசுகள் இன்று மாலை சுமார் 5. 30 மணியளவில் வழங்கபட்டது.

டேக்ஸ் :