சிவகங்கை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, இன்று மாலை சுமார் 6 மணியளவில் சிவகங்கை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் இரா. கஜலட்சுமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில், அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் மேற்கொண்டார். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே, அவர்கள், தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். செல்வசுரபி அவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமியின் திட்ட இயக்குனர் ஆ. ரா. சிவராமன் அவர்கள் உட்பட அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த முதன்மை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.