கோயிலில் கிரிக்கெட்விளையாடுவதில்என்ன தவறுஎல். முருகன் காட்டம்

70பார்த்தது
ஆங்கிலேயர்களை எதிர்த்த வீரப்பெண்களில் வேலுநாச்சியாரும், குயிலியும் முக்கியமானவர்கள். வீரத்தாய் குயிலியின் 144 ஆம் ஆண்டு நினைவு தினத்தைமுன்னிட்டு, சிவகங்கை அருகே சூரக்குளம் பகுதியில் அமைந்துள்ள வேலுநாச்சியார் நினைவு மணிமண்டபத்தில் உள்ளகுயிலியின் திருவுருவச் சிலைக்கு, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மாலையிட்டு மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது: இந்தியாவில் மக்கள் போகாத பல பகுதிக்கு கூட ரயில்சென்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ரயில்வே துறை பல்வேறு சீரமைப்புகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தவர், இன்னும் ஓராண்டில்புல்லட் ரயில் இந்தியாவில் ஓடத் துவங்கும். சென்னையில் நேற்று நடைபெற்ற ரயில்விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில்அதுகுறித்துதெரியவரும் என்றார். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு வழங்கி உள்ளதாகவும், கடந்த இரண்டு நாட்களில் தமிழக அரசிற்கு தேவையான ரூ. 7500 கோடி நிதியை நிதியமைச்சர் விடுவித்துள்ளார். மத்திய அரசு கேட்டுள்ள சில விவரங்களை தமிழக அரசு வழங்கியவுடன், கல்விக்கான நிதியை மத்திய அரசு வழங்கும்என்றார். மேலும், சிதம்பரம் கோயிலில் தீர்ச்சிகர்கள் கிரிக்கெட் விளையாடியது தவறு இல்லை என கூறியவர், துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகுஎந்த மாற்றமும் நிகழவில்லை என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி