மானாமதுரையில் சின்ன பாகற்காய் ஒரு கிலோ ரூ. 400 க்கு விற்பனை
மானாமதுரை வாரச்சந்தையில் மதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, இளையான்குடி, சிவகங்கை, பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து வியாபாரிகள் வந்து பொருட்களை வியாபாரம் செய்து வருகின்றனர். நேற்று (நவம்பர் 21) நடைபெற்ற வாரச்சந்தையில் சின்ன பாகற்காய் ஒரு கிலோ ரூ. 400, தக்காளி ரூ. 40, சின்ன வெங்காயம் ரூ. 50, பெரிய வெங்காயம் ரூ. 50, நாட்டு கத்தரிக்காய் ரூ. 90, கேரட், முள்ளங்கி, சவ்சவ் ரூ. 60, பச்சை மிளகாய் ரூ. 50, பட்டர் பீன்ஸ், சோயா பீன்ஸ், பச்சைப் பட்டாணி ரூ. 200, உருளைக்கிழங்கு ரூ. 70க்கும் விற்பனையானது.