மானாமதுரை சுற்று வட்டார பகுதியில் பனிப்பொழிவு
சிவகங்கை மாவட்டத்தில் இன்று காலை முதல் அதிகளவு பனிப்பொழிவு காணப்பட்டது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் அவ்வ பொழுது விட்டு விட்டு 2 நாட்களாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் இயல்பு நிலையை விட பனி பொழிவு அதிகமாக காணப்படுகிறது. மதுரை- ராமநாதபுரம் 4 வழிச்சாலையில் பனி பொழிவு காரணமாக வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு மெதுவாக ஊர்ந்து சென்றன.