மானமதுரை - Manamadurai

சிவகங்கை: உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய மருத்துவர்கள்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மிளகனூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ஆதீஸ்வரன் (12). இவர் கடந்த அக். 11-ம் தேதி வீட்டில் சுயநினைவின்றி கிடந்தார். ஆபத்தான நிலையில் சிவகங்கை அரசு மருத்துவமனை குழந்தைகள் நல அவசர சிகிச்சை பிரிவில் அவரை சேர்த்தனர். மருத்துவர்கள் சிறுவனை பரிசோதித்ததில் பாம்பு கடித்தது தெரியவந்தது. மேலும் நுரையீரலில் நோய் தொற்றும் இருந்தது. தொடர்ந்துஅவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு மாதத்துக்கு பின்னர் முழுமையாக குணமடைந்த அவரை மருத்துவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனுக்கு சிகிச்சை அளித்த குழந்தைகள் நலப் பிரிவுபேராசிரியர்கள் சிவக்குமார், பாலசுப்பிரமணியன், வனிதா, மயக்கவியல் பேராசிரியர் வேல்முருகன், காது மூக்கு தொண்டை பேராசிரியர் நாகசுப்பிரமணியன், செவிலியர்களை மருத்துவக் கல்லூரி டீன் சத்தியபாமா பாராட்டினார்.

வீடியோஸ்


சிவகங்கை
Nov 24, 2024, 17:11 IST/காரைக்குடி
காரைக்குடி

காரைக்குடியில் திருக்குறள் கூறி அசத்திய வெளிநாட்டவர்

Nov 24, 2024, 17:11 IST
மதுரையில் உலக தமிழ் சங்கத்தின் 43-வது உலக கவிஞர்கள் மாநாடு நவம்பர் 20 முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்றுவருகிறது. இம்மாநாட்டினை சேது பாஸ்கரா கல்வி குழுமத்தின் தலைவர் முனைவர் சேது குமணன் தலைமை ஏற்று நடத்திவருகிறார். மாநாட்டின் தொடக்க விழா நவம்பர் 21ஆம் தேதி அன்று மதுரையில் உள்ள உலகத் தமிழ் சங்க வளாகத்தில் நடைபெற்றது. இதன் பகுதியாக இன்று (24. 11. 2024) காரைக்குடி விசாலயன்கோட்டையில் அமைந்துள்ளசேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்கள்களாக அமெரிக்கா, லண்டன், ஃபிரான்ஸ், ஈக்குவேடர், இஸ்ரேல், நியூசிலாந்து, ஜப்பான், ஹங்கேரி, மெக்சிகோ, ரோமானியா போன்ற உலகத்தின் பல்வேறு நாடுகலிருந்து வருகை புரிந்த கவிஞர்கள் தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக பாரம்பரிய உடைகளான புடவை, வேட்டி சட்டை முதலியவற்றை அணிவித்து மகிழ்வித்தனர். தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் கவிக்காடு என்ற தலைப்பில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியை துவங்கி வைத்தனர். தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் திருக்குறளை தமிழில் கூறி அசத்தினர். மேலும் உலக நாடுகளில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் இருந்தும் வருகை புரிந்த கவிஞர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் இன்று சந்தித்தனர்.