தஞ்சாவூர்: கும்பகோணத்தில் நடந்த அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில், திண்டுக்கல் சீனிவாசன் மேடையில் பேசத் தொடங்கும் நேரத்தில் கட்சியின் ஒரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முன்னதாக இன்று காலை நெல்லையிலும், நேற்று கன்னியாகுமரியிலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுகவினர் இருபிரிவுகளாக மோதிக்கொண்டனர். அதிமுகவின் மூத்த தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் அக்கட்சியினர் இருபிரிவுகளாக அடித்துக்கொண்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.