நெற்பயிர்களை சேதப்படுத்தும் பறவைகள்

81பார்த்தது
சிவகங்கை மாவட்டம்
திருப்புவனம் வட்டாரத்தில் நடவு செய்யப்பட்ட வயல்களில் கூட்டம் கூட்டமாக வலம் வரும் பறவைகள் நெற்பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் புலம்புகின்றனர். திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மடப்புரம், பழையனூர் உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை நம்பி சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு பணிகள் நடைபெறும், வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகள் தற்போது நடவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வைகை ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகள் என்பதால் நாற்றங்கால் அமைத்து நாற்றுகள் வளர்த்து அதன்பின் 30 முதல் 45 நாட்கள் கழித்து அதனை பறித்து வயல்களில் நடவு செய்வார்கள், நடவு செய்வதற்கு வசதியாக வயல்களில் உழவு பணிகள் மேற்கொண்டு தண்ணீர் பாய்ச்சுவது வழக்கம். அதுபோன்ற சமயங்களில் வயல்களில் பூச்சிகள், புழுக்கள், நண்டு, சிறு மீன்கள் உள்ளிட்ட ஏராளமானவைகள் வலம் வரும் இவற்றை உண்பதற்காக நீர்க்காகம், கானங்குருவி, செங்கால் நாரை, நாரை, கொக்கு உள்ளிட்ட ஏராளமான பறவை இனங்கள் வரும், பொதுவாக வயல்களில் 10 முதல் 20 பறவைகள் வரை கூட்டமாக வந்து இரை தேடும், இந்தாண்டு கருப்பு காக்கை என அழைக்கப்படும் பறவைகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவைகள் கூட்டம் கூட்டமாக வந்து நெல் வயல்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி