நாம் தமிழர் கட்சியில் இருந்து கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் உள்பட அவரது தலைமையில் நிர்வாகிகள் சிலர் விலகியுள்ளனர். இதுகுறித்து அவர் கூறுகையில், “அருந்ததியர் சமூகத்தை வந்தேறிகள் என சீமான் பேசியதால் களத்தில் இருக்கும் எங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கட்சி கொள்கையும் சீமானின் நடத்தையும் நேர் எதிராக மாறி உள்ளது. நாம் தமிழர் கட்சியில் அடுத்தக் கட்ட தலைவர்கள் யாரும் இல்லை” என குற்றச்சாட்டினார்.