சவுதி அரேபியாவில் உள்ள இரண்டு நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலை உலகின் மிக நீளமான நேரான சாலை என்கிற சிறப்பை பெற்றுள்ளது. இந்த நெடுஞ்சாலை 239 கி.மீ. (149 மைல்) நீளம் கொண்டது. அதன்படி, தென்மேற்கில் உள்ள Al Darb நகரத்தையும் கிழக்கில் Al Batha நகரத்தையும் இணைக்கும் சாலை மிக நீளமாகவும் நேராகவும் இருக்கிறது. பரபரப்பான சாலையான இதில் சரக்குகளை அனுப்பும் டிரக் லாரிகள் அதிகம் செல்வதை காணமுடிகிறது.