சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள பெருமச்சேரி மேல தெருவில் அமைந்துள்ள வேல்முருகன் ஆலயத்தில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று கணபதி ஹோமத்துடன் தொடங்கியது
யாகசாலைகளில் புனித நீர் அடங்கிய குடங்களை வைத்து நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. வேல் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் இன்று மாலை சுமார் 5 மணி வரை கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.