சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர் மீது வழக்கு

58பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வளநாடு பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக மானாமதுரை நகர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது அதன் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டார் அந்த சோதனையில் மானாமதுரை பகுதியைச் சேர்ந்த ராமு வயது 47 என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது அதன் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்த 26 மதுபாட்டில் மற்றும் 300 ரூ பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி