சிவகங்கை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி

71பார்த்தது
சிவகங்கை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள தம்பிபட்டி பகுதியில் வசித்து வந்தவர் முருகன்(35). ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு ஜெனிபர் நிஷா(25) என்ற மனைவி உள்ளார். இதனிடையே ஜெனிபர் நிஷாவுக்கு முருகனின் நண்பர் ராஜேஷ் கண்ணா(35) என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதை அறிந்து கணவர் கண்டித்ததால் ஜெனிபர் நிஷா, ராஜேஷ் கண்ணா இருவரும் திட்டமிட்டு முருகனை அடித்துக்கொலை செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த போலீசார் ஜெனிபர் நிஷா, ராஜேஷ் கண்ணா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த ஹரிகிருஷ்ணன்(25) ஆகிய மூவரையும் நேற்று (நவம்பர் 21) கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி