மானமதுரை - Manamadurai

சிவகங்கை: மாற்றுத்திறனாளியை பெண் ஒருவர் தாக்கும் வீடியோ வைரல்

சிவகங்கை பனங்காடி சாலையில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்திற்காக தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளி கூட்டமைப்பு சார்பில் தாய் இல்லம் என்ற பெயரில் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது இந்த தாய் இல்லத்தில் நிறுவனராக புஷ்பராஜ் என்பவர் உள்ளார் இங்கு சுமார் 45 மாற்றுத் திறனாளிகள் உள்ள நிலையில் அங்குள்ள மாற்றுத்திறனாளியை பெண் ஒருவர் கம்பாள் தாக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் அங்குள்ள மாற்று திறனாளிகளை வேலை பார்க்க சொல்லி கட்டாயப்படுத்தி தாக்குவதாகவும் கழிவறைக்குள் பூட்டி துன்புறுத்துவதாகவும் அந்த வீடியோ வெளியிட்ட நபர் பதிவு செய்துள்ளார். மேலும் மாற்றுத்திறனாளியை தாக்கும் வீடியோ தற்போது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

வீடியோஸ்


சிவகங்கை
Oct 21, 2024, 17:10 IST/காரைக்குடி
காரைக்குடி

விழிப்புணர்வு வாகனத்தை துவக்கி வைத்த ஆட்சியர்

Oct 21, 2024, 17:10 IST
வகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வேளாண்மைத்துறையின் சார்பில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நெல் பயிர் காப்பீடு செய்வது குறித்த விழிப்புணர்வு வாகனத்தை இன்று மாலை சுமார் 5. 30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகள் பயன்பெறும் வகையில், எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி விவசாயிகளின் நலன் காத்து வருகிறார்கள். அந்த வகையில், எதிர்பாராத இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் மகசூல் இழப்புகளை ஈடுசெய்யும் பொருட்டும், தாமதமின்றி உரிய காலத்தில் பயிர் காப்பீடு செய்து உரிய பலன்களை பெற்றிடும் பொருட்டும், தமிழக அரசால் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் துறை ரீதியாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாதம் வரை என அறிவிப்பும் துவக்கி வைக்கப்பட்ட வழங்குவதற்கான நட மேலும், நெல் II பயிருக்கு காப்பீடு செய்வதற்கு பிரிமியம் தொகை ஒரு ஏக்கருக்கு ரூ. 451. 80/- மட்டுமே ஆகும். நெல் II பயிர் சாகுபடி விவசாயிகள் அனைவரும் பிரிமியம் தொகையினை தங்கள் பகுதியிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் அரசு பொது சேவை மையங்களில் செலுத்தி, வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்.