இளையான்குடியில் திமுக கவுன்சிலர் பரபரப்பு குற்றச்சாட்டு

69பார்த்தது
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் இன்று நடைபெற்றது தலைவர் முனியாண்டி முன்னிலை வகித்தார் கவுன்சிலர்கள் பங்கேற்கும் கடைசி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் இந்தக் கூட்டத்தில் திமுக ஒன்றிய கவுன்சிலர் பெரும்பச்சேரி முருகன் பேசும்போது கடந்த மூன்று வருடமாக வளர்ச்சி நிதிகள் என்பது வரவே இல்லை என்றும் இந்த அலுவலகம் பெயர் ஊரக வளர்ச்சி அல்ல இனி தேய்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும் குறிப்பிட்ட பகுதிக்கு மின்சாரம் தண்ணீர் , ரோடு எல்லாம் சென்றடைகிறது இன்னொரு பகுதிக்கு எதுவுமே சென்றடையவது இல்லை நிதியை பகிர்ந்து அளிக்கிறார்களா அல்லது ஒரு பக்கத்திற்கு மட்டும் கொடுக்கிறீர்களா என கேள்வி எழுப்பினர் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டு உள்ள நீர்வளத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்றும் இதே போல் பெரும்பச்சேரி மின்சாரம் தம்பி அறுந்து விழுந்து ஒரு சிறுவன் பலியாகி உள்ளான் அது சம்பந்தமாக மின்சார வாரிய அதிகாரிகள் யாராவது வந்து உள்ளீர்களா என்றும் இந்த ஐந்தாண்டுகளில் பொதுப்பணி துறையும் மின்சார வாரியமும் செயல்படாத துறையாகவே இருந்து வருவதாக திமுக ஒன்றிய கவுன்சிலர் பெரும்பச்சேரி முருகன் இன்று மதியம் சுமார் இரண்டு மணி அளவில் குற்றம் சாட்டி பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி