கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

83பார்த்தது
வைகை அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக வைகை அணை முழு கொள்ளளவை எட்டியது இதனால் வைகை அணையில் இருந்து சுமார் 2000கனஅடி‌‌உபரி நீர் தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், மாவட்டங்களுக்கு விவசாயத்திற்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது , இத்துடன் மழை தண்ணீரும் சேர்த்து சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் சுமார் 3ஆயிரம் கன அடி தண்ணீர் வைகை ஆற்றில் சென்று கொண்டிருக்கிறது. இதனால் திருப்புவனம் மானாமதுரை வழியாக கடந்து செல்லும் வைகை ஆற்றில் தண்ணீர் இருபுறமும் கரைபுரண்டு செல்கிறது வைகை ஆறு பார்ப்பதற்கு கடல் போல் காட்சியளிக்கின்றது. இதன் காரணமாக மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் வசிக்கும் வைகை ஆற்று கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மானாமதுரை அருகே வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன கீழப்பசலை தடுப்பணையில் வெள்ள நீர் நிரம்பி வழிந்தது அழகாக சொல்கிறது. இதை மதுரை - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் செல்லும் பயணிகள் பார்த்து ரசித்துக்கொண்டே செல்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி