சென்னை மத்திய சிறையில் கடந்த 17. 11. 1999 அன்று கைதிகளுக்குள் ஏற் பட்ட மோதலை அங்கு துணை சிறை அலுவலராகப் பணியாற்றிய எஸ். ஜெயக்குமார் தடுக்க முயன்றபோது கைதிகளால் தாக்கப்பட்டு உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். இவருடன் 9 கைதிகளும் கொல்லப்பட்டனர். இதையடுத்து, சிவகங்கையில் இவருக்கு சொந்த இடத்தில் குடும்பத்தினரால் நினைவிடம் அமைக்கப்பட்டது. இங்கு, ஆண்டுதோறும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், சிறைத்துறையினர் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இவர் இறந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், சிவகங்கையிலுள்ள அவரது நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மரியாதை செலுத்தினர்.
மேலும், சிவகங்கை கிளைச்சிறை கண்காணிப்பாளர் அ. பாலமுருகன், சிறை காவல் அதிகாரிகள் முத்து மனோ சுப்பிரமணிய பாரதி, பெ. கண்ணபெருமாள், சக்திவேல், ராஜபாண்டி, சிவ கங்கை நகர் துணைக் காவல்கண்காணிப்பாளர் அமலஅட்வின், சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் அன்ன ராஜ், காவல் அதிகாரிகள், ஆயுதப்படை காவல் அதிகா ரிகளும் மரியாதை செலுத்தினர்.