நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று, நடிகர் ரஜினிகாந்த்தைச் சந்தித்தார். சுமார் 20 நிமிடங்கள் உரையாடியுள்ளார். இது அரசியல் சூழலில் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது. இதுகுறித்து சீமான் கூறுகையில், “ரஜினியுடன் திரைத்துறை, அரசியல் என பல விஷயங்களை பேசினேன். ரஜினியை சந்தித்ததே அரசியல்தான். அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை. அவருடன் நிறைய விஷயங்கள் பேசினேன். அதை எல்லாம் பகிர்ந்து கொள்ள முடியாது. சங்கி என்றால் நண்பன் என்று அர்த்தம்” என்றார்.