சங்கராபுரம்: பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்றது செல்லாது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்தது. வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றதாக முதலில் தேவி மாங்குடிக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கு பிரியதர்ஷினி ஐயப்பன் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே தேவி மாங்குடி தரப்பினர் இல்லாமல் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக மற்றொரு சான்றிதழ் வழங்கப்பட்டது. தனக்கு முதலில் வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் வேறொருவருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கியதை எதிர்த்து தேவி மாங்குடி தரப்பில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து தன்னை பதவி ஏற்க அனுமதிக்கும் படி தேவி மாங்குடி தரப்பில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி இடம் கோரிக்கை வைக்கப்பட்டு அனுமதியுடன் சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவராக கடந்த 2023 ஆம் ஆண்டு மாங்குடி எம்எல்ஏ மனைவி தேவி மாங்குடி பதவி ஏற்றுக்கொண்டார். பிறகு சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த நான்கு வருடங்களாக நடைபெற்று வந்தது வழக்கில் இன்று (அக்.,23) பிரியதர்ஷினி ஐயப்பன் வெற்றி பெற்றது செல்லும் என்று மாவட்ட நீதிபதி சொர்ணம் நடராஜன் தீர்ப்பளித்துள்ளார் இதன் மூலம் தேவி மாங்குடி வெற்றி செல்லாது என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளளார்.