மணிமுத்தாறு ஆற்றில் விமர்சையாக நடைபெற்ற தீர்த்தவாரி

72பார்த்தது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் அமைந்துள்ள மணிமுத்தாறு ஆற்றில் இன்று துலா மாத பிறப்பை முன்னிட்டு தீர்த்தவாரி வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது ஆண்டுதோறும் துலாமாதம் என்ற ஐப்பசி மாதம் முதல் தேதியில் தேவகோட்டை நகரில் உள்ள அனைத்து கோவில்களிலிருந்து உற்சவ தெய்வங்கள் ஒன்று சேர்ந்து மணிமுத்தாறு ஆற்றில் தீர்த்தவாரி வைபவம் நடைபெற்று வருகின்றன இந்த ஆண்டு துலா மாத ஐப்பசி பிறப்பை முன்னிட்டு தீர்த்த வாரி வைபவம் நடைபெற்றது முன்னதாக சிலம்பரணி விநாயகர் சுவாமி நகர சிவன் கோவிலில் இருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமி ஸ்ரீ கைலாசநாதர் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ஸ்ரீ கோதண்ட ராமர் ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் கோட்டூர் நகர சிவன் கோவிலில் இருந்து உற்சவ தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனம் ரிஷப வாகனங்களில் எழுந்தருளி நகரை முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தனர் தொடர்ந்து மணிமுத்தாறு ஆற்றில் எழுந்தருளினர் பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தெய்வங்களின் அஸ்திர தேவருக்கு திருமஞ்சன பொடி மஞ்சள் பால் தயிர் சந்தனம் இளநீர் பன்னீர் உள்ளிட்ட பல வகையான நறுமணத் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன தொடர்ந்து தீர்த்த வாரி வைபவத்தை நடத்தி புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது இதனை அடுத்து சிறப்பு அலங்காரம் நடைபெற்று உற்சவ தெய்வங்களுக்கு மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி