

தேவகோட்டை அருகே மாட்டு வண்டி பந்தயம்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஆறாவயல், பொன்னிவயல், பேராட்டுகோட்டை, மேலசெம்பொன்மாரி ஆகிய கிராமங்கள் இணைந்து சித்திரை திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயத்தை நடத்தின. ஆறாவயலில் நடைபெற்ற போட்டியில் சிவகங்கை மாவட்டம், ராமநாதபுரம் மாவட்டம், மதுரை மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம், பல மாவட்டங்களில் இருந்து காளைகள் கலந்து கொண்டன. சின்ன மாடு பிரிவில் 6 ஜோடிகள், பூஞ்சிட்டு பிரிவில் 14 மாடுகள் பங்கேற்றன. சின்னமாடு பிரிவில் பந்தயத்தின்போது, பார்வையாளர் வந்த இருசக்கர வாகனம் மாட்டு வண்டி மீது மோதியது. இதில் 2 மாட்டு வண்டிகளின் காளைகள் சாலையை விட்டு கீழே இழுத்துச் செல்லப்பட்டன. தொடர்ந்து குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் 6 குதிரை வண்டிகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.