வகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வேளாண்மைத்துறையின் சார்பில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நெல் பயிர் காப்பீடு செய்வது குறித்த விழிப்புணர்வு வாகனத்தை இன்று மாலை சுமார் 5. 30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகள் பயன்பெறும் வகையில், எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி விவசாயிகளின் நலன் காத்து வருகிறார்கள். அந்த வகையில், எதிர்பாராத இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் மகசூல் இழப்புகளை ஈடுசெய்யும் பொருட்டும், தாமதமின்றி உரிய காலத்தில் பயிர் காப்பீடு செய்து உரிய பலன்களை பெற்றிடும் பொருட்டும், தமிழக அரசால் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் துறை ரீதியாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாதம் வரை என அறிவிப்பும் துவக்கி வைக்கப்பட்ட வழங்குவதற்கான நட
மேலும், நெல் II பயிருக்கு காப்பீடு செய்வதற்கு பிரிமியம் தொகை ஒரு ஏக்கருக்கு ரூ. 451. 80/- மட்டுமே ஆகும். நெல் II பயிர் சாகுபடி விவசாயிகள் அனைவரும் பிரிமியம் தொகையினை தங்கள் பகுதியிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் அரசு பொது சேவை மையங்களில் செலுத்தி, வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்.