சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமைக் கழகம் அறிவித்த நான்கு தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் திமுக நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது அமைச்சர் பேசும்போது,
திமுக ஆட்சிக்கு வந்தால் மின்சாரம் இருக்காது மழை பொழியாது என குற்றச்சாட்டு கூறி வந்தார்கள். தற்போது மின்தடையும் இல்லை சீரான மழை பொழிந்ததால் விவசாயிகள் தங்களது விவசாயி பணியை சீராக செய்து வருகின்றனர். இந்த மழையை வைத்துக் கூட அரசியல் செய்ய கூடிய இல்லாமல் போய்விட்டது என எதிர்க்கட்சிகள் புலம்பக்கூடிய நிலை ஏற்பட்டதுள்ளது. இயற்கையும் திமுகவிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது என்றார். மேலும், வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது யாருக்கெல்லாம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை தலைமை கழகம் அறிவிக்கும் என்றார். ஒரு இயக்கம் இயங்கிக் கொண்டிருந்தால் தான் இயக்கமாக இருக்கும். அப்படி தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்த இயக்கம் தான் வெற்றியை பெற முடியும் என்றவர், கடந்த நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்ததால் தான் வெற்றிகளை பெற்றது என்றார்.