சிவகங்கை மாவட்டம்
காரைக்குடிபகுதியில் பள்ளி கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபாகரன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதனைத் தொடர்ந்து அவரது தலைமையிலான காவல்துறையினர் பள்ளி கல்லூரி முன்பு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர் அப்பொழுது காவலர்கள் நிற்பதை பார்த்தவுடன் இரு சக்கரத்தில் வாகனத்தில் வந்த பாண்டி செல்வம் வண்டியை திருப்பி தப்பிச் சென்றான் அவனைத் தொடர்ந்து விரட்டி சென்ற காவல்துறையினர் பர்மா காலனி கற்பக விநாயகர் நகரில் உள்ள அவனது வீட்டில் வைத்து மடக்கி பிடித்தனர் அவனது வீட்டில் சோதனை செய்ததில் கூர்மையான வாள் ஒன்றும் 250 கிராம் கஞ்சா சிறு சிறு பொட்டணங்களாக விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது வாள் மற்றும் 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் பாண்டி செல்வதை கைது செய்து வடக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.