
சிவகங்கை: பெண்களுக்கு அங்கீகாரமளித்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி
சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் பாலின சமநிலை, பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அங்கீகாரம் அளித்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக எல்.சி.டி.எல். பழனியப்பன் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் ஸ்ரீமதி, முதன்மை மாவட்ட நீதிபதி (சிவகங்கை) அறிவொளி, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமை குற்றவியல் நடுவர் (சிவகங்கை) பசும்பொன் சண்முகையா, குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளார், காரைக்குடி அரசு சட்டக்கல்லூரி முதல்வர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டு, பாலின சமத்துவம் தொடர்பான விழிப்புணர்வு உரையாற்றினர்.