காரைக்குடி பேருந்து நிலையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு

64பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த ஆயுத பூஜை அன்று சுமார் மூன்று மணி நேரம் கனமழை செய்தது அதனைத் தொடர்ந்தும் தினசரி 30 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் வரை மழை பெய்து வருகிறது அதனால் ஆங்காங்கே பாதாள சாக்கடைகள் அடைப்பு ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர் இந்நிலையில் காரைக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் திடீர் ஆய்வு மேற்கொண்டார் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள குடிதண்ணீர் குழாயை திறந்து பார்த்த பொழுது நீண்ட நாட்களாக அது பழுதடைந்து கிடப்பதால் அதில் குடிதண்ணீர் வரவில்லை முழுமையாக மாநகராட்சி ஆணையாளரிடம் குடிதண்ணீர் குழாயை சரி செய்ய உத்தரவிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி