சிவகங்கை பனங்காடி சாலையில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்திற்காக தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளி கூட்டமைப்பு சார்பில் தாய் இல்லம் என்ற பெயரில் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது இந்த தாய் இல்லத்தில் நிறுவனராக புஷ்பராஜ் என்பவர் உள்ளார் இங்கு சுமார் 45 மாற்றுத் திறனாளிகள் உள்ள நிலையில் அங்குள்ள மாற்றுத்திறனாளியை பெண் ஒருவர் கம்பாள் தாக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது மேலும் அங்குள்ள மாற்று திறனாளிகளை வேலை பார்க்க சொல்லி கட்டாயப்படுத்தி தாக்குவதாகவும் கழிவறைக்குள் பூட்டி துன்புறுத்துவதாகவும் அந்த வீடியோ வெளியிட்ட நபர் பதிவு செய்துள்ளார் மேலும் மாற்றுத்திறனாளியை தாக்கும் வீடியோ தற்போது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.