சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பெரியகாரை ஊராட்சி அடசிவயல் கிராமத்தில் 42 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் மழைக் காலம் வந்துவிட்டாலே கண்மாய் கரையின் மண் சரிந்து சாலை சேறும், சகதியுமாக மாறி விடுவதாகவும் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அதோடு, கிராமத்தில் குடிநீர் குழாய்கள் இருந்தும் முறையாக தண்ணீர் வருவதில்லை. இதனால் 3 கி. மீ. தூரத்திற்கு சென்று குடிநீர் எடுத்து வருவதாகவும் சீராக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியரக பகுதியில் ஆட்சியர் ஆஷா அஜித்திடம் அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர்.