தயிரின் புளிப்பு சுவையும் , வடையின் காரசார மொறுமொறுப்பு சுவையும் கலந்து தயிர் வடை உணவுக்கு தனி சுவையை உண்டாக்குகின்றன. தயிர் வடை உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது. இதில் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் எலும்புகளுக்கும், பற்களுக்கும் நன்மை அளிக்கிறது. புரத சத்துக்களை கொண்ட தயிர் வடை அதிக உடல் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலனளிக்கிறது. உடல் எடை குறைப்புக்கும் உதவுகிறது.