கெங்கவல்லி - Gangavalli

தலைவாசல் விவசாய கிணற்றில் சடையாளம் தெரியாத ஆண் சடலம்

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே வரகூர் வடக்கு காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் கருப்பண்ணன். இவர் ஆத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக தலைவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  தகவலின் அடிப்படையில் போலீசார் நிகழ்வு இடத்திற்கு சென்றனர். இது குறித்து ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் ஆத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றுக்குள் உடல் அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை மீட்டனர். மேலும் உடலை உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார் என்பது குறித்து தலைவாசல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా