கெங்கவல்லி - Gangavalli

சேலம்: செந்தாரப்பட்டி ஏரி கோடி விழுந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள செந்தாரப்பட்டி பகுதியில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. போதிய மழை இல்லாததால் வறண்டு காணப்பட்ட நிலையில் தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக ஏரி முழு கொள்ளளவை எட்டி நீர்வழிப் பாதையில் தண்ணீர் வழிந்தோடி கோடி விழுந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా