சேலம்: நீர்வழி ஆக்கிரமிப்பு; பொதுப்பணி அதிகாரிகள் அகற்றம்

70பார்த்தது
சேலம் மாவட்டம் கெங்கவல்லி நடுவலூர் ஏரிவாய்க்கால் தூர்வாரும் பணிக்காக பகுதி முழுவதும் சர்வே எடுக்கப்பட்டது. ஒரு சிலர் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்ட பின்னர் அந்த ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித் துறையினர் அகற்றும் பணியில் நேற்று (மார்ச் 15) ஈடுபட்டனர்.
அதில் ஒரு சிலர் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். 

பொதுப்பணித் துறையின் உதவி செயற்பொறியாளர் ரத்தினவேல் தலைமையில் போலீசார் உதவியுடன் நான்கு வீடுகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன. இதில் துணை தாசில்தார் உடனிருந்தனர். கெங்கவல்லி போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி