ஆத்தூர்: நீர் வீழ்ச்சியில் சீரான நீர் வரத்து; குளிக்க அனுமதி

69பார்த்தது
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சிக்குட்பட்ட முட்டல் கிராமத்தில் ஆணைவாரி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. கல்வராயன் மலைத்தொடர் பகுதியில் அடிவாரப் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு சேலம் மட்டுமல்லாமல் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். 

இந்நிலையில் கொட்டித் தீர்த்த கனமழையால் நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தற்போது ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி