கெங்கவல்லி - Gangavalli

கெங்கவல்லி இரட்டை கொலை; கொடூர தந்தை கைது

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கெங்கவல்லி 74 கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அசோக்குமார் தவமணி இருவரும் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் நேற்று முன்தினம்(பிப் 19) இரவு அசோக்குமாரின் கள்ளத்தொடர்பு மற்றும் கணவன் மனைவி நடத்தையில் சந்தேகம் காரணமாக ஏற்பட்ட தகராறில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை கொடூரமாக வெட்டிய நிலையில் குழந்தைகள் வித்யா தாரணி (13), அருள் பிரகாஷ் (5), சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க உயிரிழந்த நிலையில் தொடர்ந்து அசோக்குமாரின் மனைவி தவமணி மற்றும் மகன் அருள்குமார் இருவருக்கும் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் அசோக்குமாரிடம் போலீசார் கடுமையான விசாரணையில் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளையும் வெட்டியதை ஒப்புக்கொண்டு பரபரப்பு வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து போலீசார் அசோக்குமார் ஏற்கனவே தலையில் காயம் அடைந்த நிலையில் கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அசோக்குமாரை நேற்று இரவு கெங்கவல்லி போலீசார் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా