கெங்கவல்லி - Gangavalli

வீரகனூர் சூறைக்காற்று 500 ஏக்கர் மக்காச்சோளபயிர் சேதம்

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே வெள்ளையூர், பகடப்பாடி, புளியங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் விவசாயிகள் மக்காச்சோளத்தை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் திடீரென வீசிய சூறைக்காற்றால் 500க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் விவசாயிகள் பயிரிட்டிருந்த மக்காச்சோளம் பயிர்கள் முறிந்து சேதமானது. இதனால் அதிகளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.  இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது; அதிக அளவில் மக்காச்சோளப்பயிரை இப்பகுதி விவசாயிகள் பயிரிட்டுள்ளோம். அறுவடைக்கு 20 நாட்களே உள்ள நிலையில் திடீரென வீசிய சூறைக்காற்றால் முழுவதும் சேதமாகி உள்ளது. இதனால் ஏக்கருக்கு 20 முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த நிலையில் அதிகளவில் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் கூட பயிர் சேதத்தை ஆய்வு செய்ய வரவில்லை என குற்றம் சாட்டினார். எனவே உடனடியாக பயிர் சேதத்தை கணக்கிட்டு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా