கெங்கவல்லி ௯ரைவீட்டில் மின் கசிவால் தீ விபத்து

59பார்த்தது
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தெடாவூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் மணியன் இவரது குடிசை வீட்டில் அவரது தங்கையான லட்சுமி தனது குடும்பத்துடன் நான்கு ஆண்டுகளாக வசித்து வருகிறன்றனர். இந்த நிலையில் லட்சுமியின் மகளான கனகா வீட்டிற்கு லட்சுமி நேற்று சென்று அங்கேயே தங்கி உள்ளார், இந்நிலையில் அவரது வீட்டில் அதிகாலையில் மின்கசிவு ஏற்பட்டு வீட்டின் கூரையில் தீ பிடித்து மல மல என வீடு முழுவதும் பரவி எரிய தொடங்கியது இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் கெங்கவல்லி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர், மேலும் வீட்டில் இருந்த கேஸ் , டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் முற்றிலும் இருந்து சேதம் அடைந்தது.
மேலும் போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி