சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள நாவலூர் கிராமத்தில் பெரியநாயகி மற்றும் காமாட்சி அம்மன் தன்வந்திரி ஆலயம் உள்ளது: இதில் துர்க்கை மூல மந்திர 1008 ஜப ஹோம மகா துர்கா யாகம் நேற்று நடைபெற்றது. கோபூஜை கன்னியா பூஜை , ஸ்ரீ துர்கா மூல மந்திர 1008 ஜப ஹோமம் நடைபெற்றது.
இதில் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தார். சிறப்பு யாகத்தில் பங்கேற்ற நடிகர் ஸ்ரீ காந்த் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.