கெங்கவள்ளி வராத தண்ணீ ருக்குவரிஎதற்குபொதுமக்கள் வாக்குவாதம்

79பார்த்தது
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகேநடுவலூர் ஊராட்சிக்குட்பட்ட மோட்டூர் கிராமத்தில் 2023 24 ஆம் ஆண்டு 15 வது நிதி குழு மானியத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 155 குடும்பங்களுக்கு வீடு தோறும் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டன. மோட்டூர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டதிலிருந்து இரண்டு ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கெங்கவல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சந்திரசேகரன் அப்பகுதி பொதுமக்களிடம் குடிநீர் கட்டணம் வசூலிப்பதற்காக நேற்று அலுவலர்களுடன் சென்றார். அப்போதுபொதுமக்களிடம் குடிநீர் கட்டணம் செலுத்த வேண்டும் குடிநீர் கட்டணம் செலுத்தவில்லை என்றால் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரித்தார்.
தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் முறையாக தண்ணீர் விநியோகம் செய்யப்படாத நிலையில் வராத தண்ணீருக்கு எதற்காக வரி வசூலிக்கிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி