ஆத்தூர் நடுவழியில் நின்ற அரசு பேருந்து பயணிகள் அவதி வீடியோ

62பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் கோபாலபுரம் செல்லும் 8 நம்பர் அரசு நகர பேருந்து வழக்கமாக மாலை நேரங்களில் இயங்கி வருகிறது இந்தப் பேருந்து நேற்றுமாலை 5 மணி அளவில் புத்திர கவுண்டம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் வந்தபோது திடீரென அரசு பேருந்து பழுதாகி நின்றது இதில் பயணித்த பயணிகள் அனைவரும் மாற்று பேருந்து ஏற்றி விடப்பட்டனர். பேருந்து பஸ் நிறுத்தத்தில் நின்று விட்டதால் கருமந்துறை செல்லும் வாகனங்களும் சேலத்தில் இருந்து ஆத்தூர் செல்லும் வாகனங்களும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது அதன் பின்னர் பொதுமக்கள் அங்கிருந்தவர்கள் அனைவரும் அரசு பேருந்தை தள்ளி அதனை இயக்க முயற்சி செய்தனர் அப்பொழுதும் பேருந்து ஸ்டார்ட் ஆகவில்லை அதன் பின்னர் அனைவரும் சேர்ந்து பேருந்து ஒரு புறமாக ஓரம் கட்டி நிறுத்தினார்கள் அரசு பேருந்து நடுவழியில் நின்று ஒரு மணி நேரம் போக்குவரத்து சம்பவம் வெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது பேருந்தை தள்ளும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி