சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முட்டல் கிராமத்தில் ஆணைவாரி நீர்வீழ்ச்சி உள்ளது. வனத்துறை சார்பில் ஏரி பகுதியில் பூங்கா அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் சேலம் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குடும்பத்தாரோடு வந்து செல்கின்றனர். கோடை காலம் துவங்க உள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கன மழை காரணமாக நீர்வரத்து சீராக வருவதால் விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் உற்சாக குளியலிட்டனர். ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர். பூங்கா உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் பொழுதை கழித்து வருகின்றனர். மேலும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.