சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை கீழ் பணியாற்றும் அலுவலர்கள் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இதர நிலை பணி மாறுதல் உத்தரவினை வெளியிட வேண்டும். காலம் கடந்த ஆய்வுக்கூட்டத்தினை கைவிட வேண்டும். மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் திட்டத்திற்கு நிதி விடுவிக்க உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.பணிகளைப் புறக்கணித்து 30-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.