கெங்கவல்லி: சுவேத நதியில் மாசி பௌர்ணமி ஆரத்தி பூஜை

65பார்த்தது
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தம்மம்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு சிவன் கோவிலில் மாசி மாத பெளர்ணமியையொட்டி சுவேத நதிக்கு பாயும் சுவேத நதிக்கு பூஜை செய்யப்படுவது வழக்கம். அதே போல் நேற்று மாசி மாத பெளர்ணமி முன்னிட்டு நதிக்கு விளக்குகள் ஏற்றி மலர்தூவி பூஜைகள் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் தம்மம்பட்டி, நாகியம்பட்டி, உலிபுரம், ஜங்கம் சமுத்திரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி