சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டிடம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. இதற்காக பழைய கட்டிடத்தில் உள்ள பொருட்களை மாற்று இடத்திற்குகொண்டு செல்லும் பணியும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சட்டமேதை அம்பேத்கர், முன்னாள் பிரதமர் நேரு, உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்களை குப்பைகள் கொட்டி கிடக்கும் இடத்தில் வைத்துள்ளனர் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது. தலைவர்கள் புகைப்படத்தை குப்பை கொட்டி கிடக்கும் இடத்தில் வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.