எடப்பாடி - Edappadi

தொடர் விடுமுறை பூலாம்பட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறை பூலாம்பட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதியில் வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர். கதவணை பகுதியில் உள்ள அணைப்பாலம், பிரதானமதகு பகுதி, நீர் மின் உற்பத்தி நிலையம், நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள், காவிரி கதவணை பகுதிகளில் விசைப்படகு சவாரி செய்து பொழுதை கழித்தனர். அப்பகுதியில் விட்டு விட்டு பெய்த சாரல் மழையால் நிலவிய ரம்யமான சூழ்நிலையில் காவிரி ஆற்றில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். இதேபோல் பூலாம்பட்டி கைலாசநாதர் கோவில், காவிரி கரையில் அமைந்துள்ள பிரமாண்ட நந்திகேஸ்வரர் சன்னதி, படித்துறை பிள்ளையார் கோவில், காவிரித்தாய் சன்னதி உள்ளிட்ட இடங்களில் வழக்கத்தை விட கூடுதலான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். தொடர் விடுமுறை எதிரொலியாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருந்த நிலையில் அப்பகுதியில் கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా