சிவகங்கை: மாயாண்டி சுவாமி தவசாலையில் சிறப்பு மகா யாகம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில் உள்ள மகா சித்தர் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் தவசாலையில் ஆண்டுதோறும் விவசாய செழிக்க வேண்டியும் இயற்கை சீற்றங்கள் ஏதும் ஏற்படக்கூடாது என்று வைகுண்ட ஏகாதசி தினத்தில் இரவில் உலக அமைதிக்காக சிறப்பு மகா யாகம் வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் மகா யாகம் நடைபெற்றது. இந்த மகா யாகத்தில் பத்தடி உயரத்திற்கு எழும்பிய தீ ஜுவாலைகளை பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த யாகத்தில் 21 மூலிகை செடிகள், அனைத்து வகையான பழங்கள், பூ, மாலைகள் போடப்பட்டு யாக சாலை வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டது. மகா யாகத்தில் கலந்துகொண்ட ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.