சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஐயப்பா சேவா சங்கம் சார்பில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் மாலை அணிவித்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசனம் செய்ய கேரள மாநிலம் சபரிமலைக்கு சென்றுள்ளனர். 48 நாள் விரதம் இருந்து 48 மைல் பாதையில் செல்லும் இவர்கள் இன்று வழியில் உள்ள ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ததுடன் உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், அனைத்து மக்களும் அனைத்து வளங்களையும் பெற்று சிறப்போடு வாழவும், கோரி ஓம் வடிவில் விளக்குகளை ஏற்றி சிறப்பு விளக்கு பூஜை செய்தனர். இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஐயப்ப பக்தர்கள் என ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.