சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள காஞ்சிரங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா (70). அவரது வீட்டின் அருகே வசிப்பவர் 18 வயதான சக்தி கணேஷ் வசித்து வந்துள்ளார். கருப்பையாவிற்கும் சக்தி கணேஷ் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் கருப்பையாவை சக்தி கணேஷ் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மானாமதுரை டி. எஸ். பி நிரேஷ் தலைமையிலான போலீசார் கருப்பையாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக உடலை அனுப்பி வைத்த நிலையில் தப்பி ஓடிய இளைஞரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.