சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சியில் 4வது பகுதியைச் சேர்ந்த பகைவரை வென்றான் பகுதியில் ஒரு மாத காலமாக காவிரி குடிநீர் வராததை கண்டித்து அப் பகுதியை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி பேச்சு வார்த்தை நடத்தியதின் பேரில் பெண்கள் கலைந்து சென்றனர்.