சிவகங்கை மாவட்டம் சுந்தரநடப்பு அருகே உள்ள குட்டிதின்னி கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் 80 பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. எஞ்சிய 60க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மகளிர் உதவித்தொகை கிடைக்காத நிலையில் தகுதியுடைய தங்களுக்கும் மகளிர் உதவித்தொகை வழங்க கோரி பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டு மனு அளித்தனர்.
இதுவரை வழங்காத நிலையில் 60க்கும் மேற்பட்ட பெண்கள் மானாமதுரை பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் பெரியகோட்டை விளக்கு பகுதிகள் சாலைகளில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்து வந்த மானாமதுரை சிப்காட் காவல் நிலைய போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பெண்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி மாலையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.